புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வெள்ளத்தில் தவிக்கும் குடும்பத்தினரை மீட்க உதவுமாறு ஆட்சியரிடம் மனு

வடநாட்டு யாத்திரைக்குச் சென்ற தங்கள் குடும்பத்தார், வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதால், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் சிலர் மனு அளித்தனர்.

News image
Updated On :20 ஜூன் 2013, 10:40 am

முருகன்

வடநாட்டு யாத்திரைக்குச் சென்ற தங்கள் குடும்பத்தார், வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதால், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் சிலர் மனு அளித்தனர்.

தரும்புரி மாவட்டம் ரேஹடஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜாலியூர் கிராமத்தைச் சேர்ந்த 21 பேர் வடமாநிலத்துக்கு புனிதச் சுற்றுலா சென்றனர். அவர்கள், கேதரிநாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்குச் சென்று, ரிஷிகேஷ் சென்றதாகத் தெரிகிறது. நேற்று வரை குடும்பத்தாரைத் தொடர்பு கொண்ட அவர்கள், பின்னர் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளவில்லையாம். அவர்கள் நடுவழியில் மாட்டிக் கொண்டுள்ளனர் என்றும், உணவு உடை இன்றி தவித்து வருகின்றனர் என்றும் கூறி, 21 பேரின் குடும்பத்தினர், தங்களது உறவினர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி தருமபுரி ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.