விருதுநகரில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து கழுத்தில் கிடந்த 3 சவரன் நகை பறித்துச் சென்று தப்பியோடிய மர்ம நபர் குறித்து போலீஸார் தீவீரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது: விருதுநகர் அருகே முத்துராமன்பட்டியில், சிவந்திபுரம் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் என்பவரின் மனைவி சந்திரா(57). இவர் கடைவீதியில் பொருள்கள் வாங்கிக் கொண்டு வெள்ளிக்கிழமை சத்தியமூர்த்தி சாலையில் தனியார் கண் மருத்துவமனை முன்பு நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அவர் பின்னே 30 வயதுடைய மர்ம நபர் ஒருவர் நடந்து வேகமாக வந்து வழிமறித்து கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை பறித்தாராம்.
பின்னர், சத்தம் போட்டதையடுத்து பொதுமக்கள் வந்து கூடி விரட்டியுள்ளனர். அப்போது மர்ம நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அந்த இடத்திலிருந்து தப்பியோடினார். இது குறித்து விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீஸாரிடம் சந்திரா புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டிலேயே வளா்ச்சியில் தமிழகம் முதன்மை! - கே.வி. தங்கபாலு

குடிபோதையில் தகராறு செய்த தம்பி வெட்டிக் கொலை; அண்ணன் கைது

தலைநகரில் அதிகபட்ச வெப்பநிலை 40.1 டிகிரி செல்சியஸாகப் பதிவு!

அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும்! - ராஜபாளையம் தமமுக வேட்பாளா் பிரிசில்லா உறுதி
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

