சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு ரூ. 1 கோடி வரை கடன்

இந்தத் திட்டத்தின் மூலம் ரூ. 5 லட்சம் முதல் ரூ. ஒரு கோடி வரை கடனுதவி 25 சதவீத மானியத்துடன் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் மானியம் பெறலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை

Updated On :22 ஜூன் 2013, 3:44 pm IST

முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு ரூ. ஒரு கோடி வரை கடன் வழங்கப்படுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.

கரூரில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் குறித்த இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான தகவல் பரப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கில் அவர் மேலும் பேசியதாவது:

இந்தத் திட்டத்தின் மூலம் ரூ. 5 லட்சம் முதல் ரூ. ஒரு கோடி வரை கடனுதவி 25 சதவீத மானியத்துடன் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் மானியம் பெறலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.  இந்தத் திட்டப் பயனாளிகள் எண்ணிக்கையில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.தொழில்முனைவோர் வங்கிகளில் கடன் பெற முயற்சிக்கும்போது, சில இடையூறுகள்  ஏற்படலாம். வங்கிகள் கேட்கும் ஆவணங்களையும், தெளிவான திட்ட அறிக்கையும் அளிக்கும்பட்சத்தில், வங்கிகள் உடனடியாக கடனுக்கான ஒப்புதலை வழங்கும் என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செ.மு. முருகேசன், அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் ஆ. சுந்தரம் ஆகியோர் திட்டம் குறித்து விளக்கி பேசினார். மாவட்ட ஊராட்சித் தலைவர் கீதா மணிவண்ணன் வாழ்த்தி பேசினார். முன்னதாக மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வே. துரை வரவேற்றார். மேலாளர் (கிராமத் தொழில்கள்) கி. கோகிலம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.