இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி தேசிய பொதுக்குழு உறுப்பினரும், காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணைத் தலைவருமான கே.வி.கண்ணன்பிள்ளை தெரிவித்தது: 1998ம் ஆண்டு புதிய வீராணம் திட்டம் தொடங்கப்பட்ட போது ரூ.110 கோடி செலவில் வடவாறு சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. வடவாற்றில் இருகரைகளையும் காங்கிரீட் பாலகைகள் கொண்டு லைனிங் செய்து வடவாற்றின் தரைத்தளம் முழுமையும் காங்கிரீட் பணிகளாக செய்யப்பட்டது. அப்போது காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி தலைவராக இருந்த நான் வடவாற்றில் காங்கிரீட் மூலம் தரைதளம் அமைப்பதற்கு எதி்ர்ப்பும், எச்சரிகையும் செய்தேன். இருப்பினும் பணிகள் செய்து முடிக்கப்பட்டன. அதன் பலனாக தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள வடவாற்றின் கீழ்புரம், மேல்புறம் கரைகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பலனை அனுபவித்து வருகின்றனர்.