திருவண்ணாமலை பகுதியில் முன்னாள் அமைச்சர்களின் கல்லூரிகளில் திருட்டு
திருவண்ணாமலை பகுதியில் திமுக., அதிமுக.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களின் கல்லூரிகளில் திருட்டு மற்றும் கல்லூரிகளை


திருவண்ணாமலை பகுதியில் திமுக., அதிமுக.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களின் கல்லூரிகளில் திருட்டு மற்றும் கல்லூரிகளை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.எல்.ஏ.,வுக்குச் சொந்தமான அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவண்ணாமலையை அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ளது. இந்தக் கல்லூரியில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள், அலுவலக அறைகளை உடைத்து 4 கணினியைத் திருடி, கதவு ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதற்கு அடுத்த வளாகத்தில் உள்ள செழியன் கல்வியியல் கல்லூரியில் அலுவலக அறையை உடைத்து ரூ. 52 ஆயிரம் திருடிச் சென்றுள்ளனர். இங்கும் அலுவலக, வகுப்பறைக் கதவுகள் ஜன்னல்கள் உடைக்கப்பட்டிருந்தன. இந்தக் கல்லூரி அதிமுக அமைச்சராக இருந்த ஆர்.ராமசந்திரனுக்குச் சொந்தமானது.
இந்த இரு சம்பவங்களும் நேற்று இரவு நடந்துள்ளன.
அதே போல், இரு தினங்களுக்கு முன்னர் திமுகவின் முன்னாள் அமைச்சரான ஏ.வ.வேலுவின் கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸில் புகார் பதிவாகி விசாரணை நடைபெற்றுவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...