லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

மாநகர காவல் துறை பெண் அதிகாரியிடம் 4 சவரன் நகை பறிப்பு: பைக்கில் வந்த நபர்கள் கைவரிசை

அருப்புக்கோட்டையில் மாநகர காவல் துறை அலுவலத்தின் பெண் அதிகாரியை வழிமறித்து 4 சவரன் நகையை பைக்கில் வந்து பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On :27 ஜூன் 2013, 10:32 am

அருப்புக்கோட்டையில் மாநகர காவல் துறை அலுவலத்தின் பெண் அதிகாரியை வழிமறித்து 4 சவரன் நகையை பைக்கில் வந்து பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறியதாவது: அருப்புக்கோட்டை அருகே புளியம்பட்டியைச் சேர்ந்த ராமசந்திரனின் மனைவி ரேவதி(56). இவர் மதுரை மநாகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், புதன்கிழமை மாலையில் வழக்கம் போல் பணிமுடிந்து மதுரை ரயில் நிலையத்திலிருந்து ரயிலேறி விருதுநகருக்கு வந்துள்ளார். இங்கிருந்து பஸ்ஸில் ஏறி  புளியம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்றாராம். அப்போது பின்புறமாக பைக்கில் வந்த மர்ம நபர்கள் திடீரென வழிமறித்து, ரேவதியின் கழுத்தில் கிடந்த 4 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.

உடனே இது தொடர்பாக அருப்புக்கோட்டை நகர காவல் நிலையத்தில் ரேவதி புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பைக்கில் வந்து நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.