பல்கலை.க்கு மாணவர்கள் அனுப்பும் டி.டி.யை முறைகேடாக விற்று காசு பார்த்தவர் கைது
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அனுப்பும் வரைவோலை(டி.டி.,)யை முறைகேடாக விற்று காசுபார்த்த தொகுப்பூதியப் பணியாளர் கைது செய்யப்பட்டார்.


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அனுப்பும் வரைவோலை(டி.டி.,)யை முறைகேடாக விற்று காசுபார்த்த தொகுப்பூதியப் பணியாளர் கைது செய்யப்பட்டார்.
பல்கலை.க்கு மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட விண்ணப்பங்களை அனுப்பும் மாணவர்களின் விண்ணப்பத்தில் இருந்து டி.டி.யை தனியாகப் பிரித்தெடுத்து, அவற்றை வைத்துக் கொண்டுள்ளார் வெங்கடேசன். தொகுப்பூதியப் பணியாளரான இவர் எடப்பாடி அருகே உள்ள ராக்கிப் பட்டியைச் சேர்ந்தவர்.
பின்னர் அவசர அவசரமாக டி.டி. எடுக்காமல் பல்கலை.க்கு விண்ணப்பத்துடன் வரும் மாணவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, இந்த டி.டி.யை அவர் கொடுத்து விடுவாராம். இவ்வாறு பண முறைகேட்டில் இவர் ஈடுபடுவதாக பல்கலை. பதிவாளர் அங்கமுத்து அளித்த புகாரின் பேரில் ஓமலூர் போலீஸார் வழக்கு பதிந்து, வெங்கடேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...