கல்குவாரிகள், செங்கல் சூளைகளில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பணிகள் ஆணைக் குழு எச்சரித்துள்ளது.
குளித்தலை வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தோகைமலை ஒன்றியத்தில் உள்ள ஆலத்தூரில் உலக குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினம் மற்றும் சட்ட கல்வியறிவு சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் சக்திவேல் தலைமை வகித்தார். வழக்குரைஞர்கள் மனோகரன், வெள்ளைச்சாமி ஆகியோர் பேசுகையில், தோகைமலையில் உள்ள கல்குவாரிகள் மற்றும் செங்கல் சூளைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றுவதாக புகார்கள் பெறப்பட்டால், அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குழந்தைகளின் வருமானம் பெற்றோருக்கு அவமானமாகும்.தமிழக அரசு குழந்தைகளுக்கு இலவச கல்வியை அனைத்து நிலைகளிலும் அளித்து வருகிறது. எனவே குழந்தைகளின் எதிர்காலம் கருதி தோகைமலையில் குழந்தை தொழிலாளர் இல்லாத நிலை உருவாக்க வேண்டும் என பேசினர். முகாமில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

வள்ளுவரைக் களங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


