புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தருமபுரி அருகே கல்லூரிப் பேருந்துகள் மோதி விபத்து: 4 மாணவிகள் பலி

தருமபுரி அருகே இரு கல்லூரிப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில், 4 மாணவிகள் பலியாயினர்.

News image
Updated On :1 மார்ச் 2013, 12:57 pm

முருகன்

தருமபுரி அருகே இரு கல்லூரிப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில், 4 மாணவிகள் பலியாயினர்.

தருமபுரி அருகே நல்லானூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி பேருந்தும், ஆட்டுக்காரன்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த ஒரு பேருந்தும்

வழக்கம்போல், மாணவியரை ஏற்றிக் கொண்டு சென்றன. இருகல்லூரிப் பேருந்துகளும் தருமபுரி பென்னாகரம் சாலையில் மல்லாபுரம் என்ற இடத்துக்கு அருகே வந்தபோது, நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு மாணவி பலியானார். 25க்கும் மேற்பட்ட மாணவியர் காயமடைந்தனர். அவர்கள் தருமபுரி அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஸ்ரீதேவி, காயத்ரி, பானு ஆகிய மூவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

மருத்துவமனை வளாகம் மாணவர்களால் சூழப்பட்டுள்ளது. சக மாணவியரின் மரணம் அங்கே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.