மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

துணைவேந்தர் வீட்டை முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்ட அண்ணாமலைப் பல்கலை. மாணவர்கள்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்கள், தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதாக ஏற்பட்ட வதந்தியால் வகுப்புகளை புறக்கணித்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள்

News image
Updated On :1 மார்ச் 2013, 11:13 am

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்கள், தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதாக ஏற்பட்ட வதந்தியால் வகுப்புகளை புறக்கணித்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது வடஇந்திய மாணவர் ஒருவர் பல்கலை. ஊழியரால் தாக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொறியியல் புல மாணவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதில் கட்டடங்களின் கண்ணாடிகள் உடைபட்டன. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று துணைவேந்தர் வீடு வளாகத்தில் வெளியே இருந்த பூந்தொட்டிகள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த சிதம்பரம் ஏஎஸ்பி எம்.துரை, இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, அறிவானந்தம் மற்றும் போலீஸார் அங்கு சென்று மாணவர்களை சமரசப்படுத்தினர். துணைவேந்தர் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என கோரி மாணவ, மாணவியர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன், பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம்  ஆகியோர் சென்று மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி கட்டணங்கள் எதுவும் உயர்த்தப்படவில்லை என்றும், பழைய நடைமுறைப்படி தேர்வு எழுதலாம் என தெரிவித்ததை அடுத்த மாணவர்கள் கலைந்து சென்றனர்.

மாணவர்கள் போராட்டம் குறித்து துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் சந்தித்து கூறியபோது: பல்கலைக்கழக அனைத்து துறைகளிலும் 80 விழுக்காடு வருகை பதிவேடு இருந்தால்தான் பல்கலைக்கழக விதிப்படி தேர்வு எழுதலாம். ஒவ்வொரு செமஸ்டர் தேர்வின் போதும் 80 விழுக்காட்டின் கீழ் 75 விழுக்காடு வரை வருகை பதிவேடு உள்ள மாணவர்கள் ரூ.500 அபராத தொகை கட்டி தேர்வு எழுதலாம். மாணவர்கள் நலன் கருதி 50 விழுக்காட்டிற்கு மேல் 75 விழுக்காடு வருகை பதிவேடு வருகை பதிவேடு உள்ளவர்கள் குறிப்பிட்ட தொகை செலுத்தி அடுத்த செமஸ்டரில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது பல்கலை விதிமுறையின் படி 75 சதவீதத்திற்கு கீழ் உள்ளவர்கள் தேர்வு எழுத அனுமதிக்ககூடாது என ஆடிட்டிங்கில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதனால் 75 சதவீத கீழ் வருகை பதிவேடு உள்ளவர்கள், அடுத்த ஆண்டு தான் மீண்டும் கட்டணம் செலுத்தி தேர்வு எழுத முடியும் சர்குலர் அனுப்பினோம். ஆனால் தேர்வு கட்டணம் உயர்த்தியதாக வதந்தி பரப்பப்பட்டதால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டு பழைய நடைமுறைப்படி தேர்வு எழுத அனுமதிப்பது என்றும், வருகிற 2013-14 ஆண்டில் பல்கலைக்கழக விதிப்படி 75 விழுக்காடு கீழ் உள்ளவர்கள் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை என்பதை அமல்படுத்தவுள்ளோம் என துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தார். அப்போது பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.