தகவல் அறிந்த சிதம்பரம் ஏஎஸ்பி எம்.துரை, இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, அறிவானந்தம் மற்றும் போலீஸார் அங்கு சென்று மாணவர்களை சமரசப்படுத்தினர். துணைவேந்தர் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என கோரி மாணவ, மாணவியர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன், பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் சென்று மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி கட்டணங்கள் எதுவும் உயர்த்தப்படவில்லை என்றும், பழைய நடைமுறைப்படி தேர்வு எழுதலாம் என தெரிவித்ததை அடுத்த மாணவர்கள் கலைந்து சென்றனர்.