மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நிவாரண கணக்கீடு செய்ததில் முறைகேடு: வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கணக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் தெரிவித்து சிதம்பரத்தில் உள்ள பரங்கிப்பேட்டை வட்டார

News image
Updated On :2 மார்ச் 2013, 11:08 am

G.Sundararaj

வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கணக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் தெரிவித்து சிதம்பரத்தில் உள்ள பரங்கிப்பேட்டை வட்டார வேளாண் விரிவாக்க அலுவலகத்தை குமாரமங்கலம் கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமாரமங்கலம் கிராமத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு கணக்கீடு செய்ய வந்த வேளாண் அதிகாரி செல்வராஜ் கிராமத்திற்கு நேரில் வந்து பார்வையிடாமல் நன்றாக விளைச்சல் பெற்ற நிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.2500 பணம் பெற்றுக் கொண்டு ஒரு தலைபட்சமாக நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே உடனடியாக முறையாக கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர்  உதவிஆட்சியர் மற்றும் வேளாண்துறை அதிகாரியை சந்தித்து புகார் மனு ஒன்றையும் அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.