மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நிவாரணம் கணக்கெடுப்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விடுபட்டதை கண்டித்து மார்ச் 8-ல் முற்றுகை போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய அமைப்புக் குழு கூட்டம் புதுசத்திரத்தில் நடைபெற்றது. விவசாயிகள் சங்க சிதம்பரம் வட்ட தலைவர் ஜீவா தலைமை வகித்தார். கூட்டத்தில் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜி.மாதவன், மாவட்டச்

News image
Updated On :3 மார்ச் 2013, 12:34 pm

G.Sundararaj

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விடுபட்டதை கண்டித்து சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்ச் 8-ல் முற்றுகை போராட்டம் நடத்துவது என விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய அமைப்புக் குழு கூட்டம் புதுசத்திரத்தில் நடைபெற்றது. விவசாயிகள் சங்க சிதம்பரம் வட்ட தலைவர் ஜீவா தலைமை வகித்தார். கூட்டத்தில் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜி.மாதவன், மாவட்டச் செயலாளர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, விவசாய தொழிலாளர் சங்க தலைவர் பி.கற்பனைச்செல்வம், வட்டச் செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

பயிர் நிவாரண கணக்கெடுப்பின் போது வறட்சியால் பாதிக்கப்பட்ட உண்மையான விவசாயிகள் விடுப்பட்டுள்ளதை கண்டித்தும், முறையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி மார்ச் 8-ம் தேதி சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவது. சைமா டெக்ஸ்டைல்ஸ் பார்க் என்ற பெயரில் பெரியப்பட்டு அருகே அமைக்கப்படவுள்ள சாயத் தொழிற்சாலையால் பாதிக்கப்படும் மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.