மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிதம்பரம் அருகே சாலையோரம் தனியார் பஸ் சாய்ந்ததில் 11 பேர் காயம்

சிதம்பரத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு மாலை 3 மணிக்கு பஸ் புறப்பட்டு சென்றது. சிதம்பரம் அருகே கீரப்பாளையம்-சாக்காங்குடிக்கு இடையே சாலை

News image
Updated On :6 மார்ச் 2013, 12:06 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே தனியார் பஸ் ஒன்று சாலையோரம் சாய்ந்ததில் பஸ்ஸில் பயணம் செய்த 11 பேர் காயமடைந்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

சிதம்பரத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு மாலை 3 மணிக்கு பஸ் புறப்பட்டு சென்றது. சிதம்பரம் அருகே கீரப்பாளையம்-சாக்காங்குடிக்கு இடையே சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது சாலையோரம் பஸ் இறங்கிய போது பெய்த மழையில் செம்மண்ணில் சக்கரம் சிக்கி பஸ் சாய்ந்தது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த வடக்கு சென்னிநத்தத்தைச் சேர்ந்த ருக்குமணி (60), ராஜலட்சுமி (40), விளாகத்தைச் சேர்ந்த மதியழகன் (54), கிளியனூரைச் சேர்ந்த சீதாலட்சுமி (40), கோபிகா (9), சங்கர் (24), காமாட்சி (40), ரத்தினாம்பாள் (60), விருத்தாசலைத்தைச் சேர்ந்த மூர்த்தி (52), எறும்பூரைச் சேர்ந்த பாஸ்கர் (33), மணக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் உள்ளிட்ட 11 பேர் காயமுற்றனர். காயமுற்ற அனைவரும் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.