சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் பரவலான மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
காவிரி டெல்டா கடை, மடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் இந்த ஆண்டு மழை பொய்த்ததாலும், மேட்டூரிலிருந்து நீர் கிடைக்காததாலும், கடும் மின்வெட்டினால் விவசாய


சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மழையினால் வறட்சியின் பிடியில் சிக்கி இருந்த பொதுமக்கள் மகிழ்ச்சியுற்றுள்ளனர்.
காவிரி டெல்டா கடை, மடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் இந்த ஆண்டு மழை பொய்த்ததாலும், மேட்டூரிலிருந்து நீர் கிடைக்காததாலும், கடும் மின்வெட்டினால் விவசாய சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகஅரசு முதன்முறையாக வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு தொகை சேர்த்து ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணத்தை வழங்கி வருகிறது. மேலும் போதிய மழை இல்லாததாலும், நீர்நிலைகளில் நீர் வற்றியதாலும் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து போனதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையினால் கடந்த இரு தினங்களாக சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக காட்டுமன்னார்கோயில் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்துள்ளது. சிதம்பரம் பகுதியில் இன்று காலை முதல் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் வறட்சியின் பிடியில் சிக்கியிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் உளுந்து சாகுபடியில் ஈடுபட்டுளள விவசாயிகள் தொடர்ந்து மழை பெய்தால், உளுந்து பயிருக்கு பாதிப்பு ஏற்படும் என கவலையில் உள்ளனர். மேலும் தாமதமாக பயிர் சாகுபடியில் ஈடுபட்டு தற்போது அறுவடை பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்த மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நெல் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வைக்கோல் மூலம் விவசாயிகளுக்கு உபரி வருமானம் கிடைக்கும். இந்நிலையில் இந்த மழையினால் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் உள்ள வைக்கோல்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...