மணிமுத்தாறில் அதிகபட்சம் 134.2 மி.மீ மழை: நெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் 3 வது நாளாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது...


திருநெல்வேலி மாவட்டத்தில் 3 வது நாளாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் 8 அடியும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 7 அடியும், ராமநதி அணை நீர்மட்டம் 10 அடியும் உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 3 வது நாளாக மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு:
பாபநாசம் அணையில் 126 மி.மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 88 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 45 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் அதிகபட்சம் 134.2 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 22 மி.மீ மழையும், ராமநதி அணையில் 20 மி.மீ மழையும், அம்பாசமுத்திரத்தில் 31.2 மி.மீ மழையும், கல்லிடைக்குறிச்சியில் 52 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 24.8 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்வு:
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 3798.92 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 2758 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 140 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 610 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்து 52.50 அடியாக இருந்தது. சேர்வலாறு அணையின் 7 அடி உயர்ந்து 72.01 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 3.2 அடி உயர்ந்து 83.80 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 2.50 அடி உயர்ந்து 57.00 அடியாகவும், ராமநதி அணையின்நீர்மட்டம் 10 அடி உயர்ந்து 48.00 அடியாகவும் இருந்தது.
அருவிகளில் வெள்ளம்:
நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து வருவதால் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் மூடப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...