சாத்தூர் நீதிமன்றங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு இன்று காலை ஒரு ரகசிய தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், சாத்தூர் நீதிமன்றங்களில் இன்று காலை வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.
இதையடுத்து, சாத்தூர் நீதிமன்றங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சாத்தூர் முக்கியச் சாலையில் உள்ள உரிமையியல் நீதிமன்றம் எண் 1, குற்றவியல் நீதிமன்றம் எண் 2 ஆகிய இரண்டு நீதிமன்றத்திலும் வழக்குரைஞர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். நீதிமன்றங்களைச் சுற்றி காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்படவில்லை.
நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் முக்கியச் சாலையில் நின்றிருப்பதால் அங்கு பெரும் பரபரப்பு காணப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது: முதல்வர் ஸ்டாலின்

மிக மோசமான நிலையில் ஈரான்! டிரம்ப் பேட்டி | US | Iran | Trump
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

