மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிதம்பரம் நந்தனார் அரசு மேல்நிலைப்பள்ளி விடுதிகளை ஆய்வு மேற்கொண்ட தாட்கோ செயலாளர் அதிர்ச்சி!

சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதிகளை இன்று ஆய்வு மேற்கொண்ட போது மோசமான நிலையில் இருந்த அறைகள், கழிப்பறையை கண்டு ஆதிதிராவிட நலத்துறை வீட்டு

News image
Updated On :9 மார்ச் 2013, 11:56 am

G.Sundararaj

சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதிகளை இன்று ஆய்வு மேற்கொண்ட போது மோசமான நிலையில் இருந்த அறைகள், கழிப்பறையை கண்டு ஆதிதிராவிட நலத்துறை வீட்டு வசதித்துறை அரசு செயலாளர் கண்ணகி பாக்கியநாதன் அதிர்ச்சியுற்று அதிகாரிகள் கண்டித்தார்.

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிட நல வீட்டு வசதித்துறை (தாட்கோ) அரசு செயலாளர் கண்ணகி பாக்கியநாதன் சிதம்பரத்தில் உள்ள அரசு நந்தனார் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதிகளை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதி வளாகம், கழிப்பறை ஆகியவை சுகாதார சீர்கேடாக இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்று பள்ளி வார்ட்டனை அழைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என கண்டித்தார். மேலும் அறைகளின் கதவுகள் சரியில்லாததால் பெரிய கற்களை வைத்து முட்டுக் கொடுத்திருப்பதை பார்த்து, அக்கதவுகளை உடனடியாக சீர் செய்து தருமாறு தாட்கோ பொறியாளரிடம் அறிவுறுத்தினார்.

மேலும் விடுதி அறையில் வெறும் தரையில் படுத்திருந்த +2 மாணவர்கள் 65 பேருக்கு உடனடியாக பாய் மற்றும் தலையணைக்கள் வழங்க ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது அரசு ஆதிதிராவிட மாணவ, மாணவியர்கள் விடுதிக்காக கோடிக்கணக்காக செலவிடுகிறது. ஆனால் அதனை சரியாக செலவிட்டு செயல்படுத்துவதில்லை என அதிகாரிகளை கடிந்து கொண்டார். ஆய்வின் போது அரசு செயலருடன் கடலூர் மாவட்ட தாட்கோ மேலாளர் ஹரிநாராயணன், பொறியாளர் திருநாவுக்கரசு, தனி வட்டாட்சியர் குணசேகரன், விடுதி வார்டன் பெருஞ்சித்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.