மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அண்ணாமலைப் பல்கலை. மாணவர்களை தொடர் உண்ணாவிரதம்: போலீஸார் குவிப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைக்கு எதிரான ஐ.நா மனித உரிமை கவுன்சில் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும், சென்னை

News image
Updated On :11 மார்ச் 2013, 1:58 pm

G.Sundararaj

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைக்கு எதிரான ஐ.நா மனித உரிமை கவுன்சில் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும், சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்திற்கும் ஆதரவு தெரிவித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நீதிவள்ளல் தலைமையில் வகுப்புகளை புறக்கணித்து ராஜபட்சேவிற்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோயில் முன்பு ஆயிரக்கணக்கான மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடங்கினர். பின்னர் மாலை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக அறிவித்து சுமார் 100 மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட கோரி ஏஎஸ்பி எம்.துரை தலைமையிலான போலீஸார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.