டெசோ அமைப்பு சார்பில் செவ்வாய்கிழமை அழைப்பு விடுக்கப்படிருந்த பொது வேலை நிறுத்தம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. கடைகள் முழு அளவில் திறந்திருந்தன.
ஸ்ரீவில்லிபுத்தூர் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் மல்லி கு.ஆறுமுகம், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் ஜான்ராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் தா.தங்கமாங்கனி, தா.ரவிக்கண்ணன் ஆகியோர் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ்நிலையம் முன்பு மறியல் செய்ய முயன்ற 36 பேரை போலீஸார் கைது செய்து திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். நகரில் அனைத்துக் கடைகளும் வழக்கம் போல் திறந்திருந்தது. அனைத்து பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கின.
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் என்.பி.சிவராஜ் தலைமையில் மறியல் செய்ய முயன்ற 34 பேரை போலீஸார் கைது செய்தனர். வத்திராயிருப்பில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின.
சுந்தரபாண்டியம்: சுந்தரபாண்டியம் பேரூராட்சி பகுதியில் 50 சதவீத கடைகள் அடைக்கப்படிருந்தது. டெசோ பொது வேலை நிறுத்தம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

