மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிதம்பரம் அருகே நிவாரணம் கோரி விவசாயிகள் சாலை மறியல்!

கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியத்தில் உள்ள மஞ்சக்கொல்லை, மிராளுர், வாண்டையாங்குப்பம், வத்தராயன்தெத்து, சீயப்பாடி, கிளாவடிநத்தம் ஆகிய கிராமங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் போதிய மின்சாரம் இன்றியும், நீரின்றியும் நெற்பயிர்கள் காய்ந்து போனது. காய்ந்து போன பயிர்களை மாடு மேய்ந்து விட்டதாலும், வைக்கோலுக்காக அறுவடை

News image
Updated On :14 மார்ச் 2013, 11:54 am

G.Sundararaj

புவனகிரி அருகே மஞ்சக்கொல்லை கிராமத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற் பயிருக்கு நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியத்தில் உள்ள மஞ்சக்கொல்லை, மிராளுர், வாண்டையாங்குப்பம், வத்தராயன்தெத்து, சீயப்பாடி, கிளாவடிநத்தம் ஆகிய கிராமங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் போதிய மின்சாரம் இன்றியும், நீரின்றியும் நெற்பயிர்கள் காய்ந்து போனது. காய்ந்து போன பயிர்களை மாடு மேய்ந்து விட்டதாலும், வைக்கோலுக்காக அறுவடை செய்ததாலும் வேளாண் அதிகாரிகள் வறட்சி நிவாரணப் பட்டியலில் அந்நிலங்களை சேர்க்கவில்லை. எனவே விடுபட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி புவனகிரி அருகே மஞ்சக்கொல்லை கிராமத்தில்  சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தலிங்கம், வள்ளலார் கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி சொக்கலிங்கம் ஆகியோர் தலைமையில் கரும்பு விவசாயிகள் சங்க  மாநிலச் செயலாளர் காமராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜி.மாதவன், ஒன்றியச் செயலாளர் இராமலிங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் ஆதிமூலம், தலைவர் பாபு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மறியலில் பங்கேற்றனர். தகவல் அறிந்த புவனகிரி வேளான் அதிகாரி ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் நந்திதா மற்றும் போலீஸார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.