காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கெயில் விவகாரம்: விவசாயிகள் உரிமை பாதுகாப்பு கூட்டத்தில் திங்களன்று வைகோ பங்கேற்பு

மத்திய அரசின் கெயில் நிறுவனம் சார்பில் கொச்சியில் இருந்து பெங்களூருக்கு எரிவாயு குழாய்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

News image
Updated On :16 மார்ச் 2013, 7:55 am

ஜபலின் ஜான்

கெயில் எரிவாயு குழாய் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான உரிமை பாதுகாப்பு கூட்டம் ஈரோடு அருகே அவல்பூந்துறையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோ பங்கேற்கிறார்.

மத்திய அரசின் கெயில் நிறுவனம் சார்பில் கொச்சியில் இருந்து பெங்களூருக்கு எரிவாயு குழாய்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த குழாய்கள் விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்வதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.  விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக தமிழகத்தில் இத்திட்டம் இப்போது தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டங்களையும் தமிழக அரசு நடத்தியுள்ளது. இந்நிலையில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் எரிவாயு குழாய் பதிப்பதால் பாதிக்கப்படும் விவசாயிகளை ஒருங்கிணைத்து உரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் அவல்பூந்துறையில் திங்கள்கிழமை நடத்தப்படுகிறது.

இக்கூட்டத்தில் ஈரோடு எம்.பி.கணேசமூர்த்தி, விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழு நிர்வாகிகள் கந்தசாமி, வழுக்குப்பாறை பாலு மற்றும் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

கூட்டத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். கூட்டத்தில் போராட்டங்களில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவித்தல், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அமைப்புகளுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.