மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இலங்கை மீது விசாரணை நடத்த வலியுறுத்தி வருகிற 20ம் தேதி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்:ஜி. ராமகிருஷ்ணன்

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்

News image
Updated On :18 மார்ச் 2013, 3:11 pm

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது விசாரணை நடத்த வலியுறுத்தி சென்னையில் வரும் புதன்கிழமை (மார்ச் 20) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்:-

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில், அந்நாட்டு ராணுவத்தால் பெருமளவு மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து போதுமான ஆதாரங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் அனைத்துப் பகுதி மக்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இனியும் காலம் தாழ்த்தாமல் போர்குற்றங்கள் குறித்து சுயேட்சையான, நம்பகத் தன்மையுள்ள உயர் மட்ட விசாரணைக்கு இலங்கை அரசு உடன்பட வேண்டும். மீள் குடியமர்த்தப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான பொருளாதார ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்.தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவத்தை விலக்கி இயல்பு வாழ்வுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும். மாநில சுயாட்சி வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்த வேண்டும் எனக்கோரி சென்னை அண்ணா சாலை தாராப்பூர் டவர் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் புதன்கிழமை (மார்ச் 20) காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

எதிர்ப்பைப் பதிவு செய்வதும், கோரிக்கைகளுக்காகப் போராடுவதும் தேவையானதுதான். ஆனால்,  தமிழகம் வரும் இலங்கை நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஏற்புடையது அல்ல. இலங்கை அரசின் நடவடிக்கைகளையும், இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.