மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கட்டண நிர்ணயக்குழுவில் பள்ளி தாளாளர்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்: மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் சங்கம்

ஆசிரியர் கல்வியியல் கல்லூரிக்கான கட்டண நிர்ணயக் குழுவில் கல்லூரித் தாளாளர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது போல், மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளித்

News image
Updated On :18 மார்ச் 2013, 12:30 pm

G.Sundararaj

ஆசிரியர் கல்வியியல் கல்லூரிக்கான கட்டண நிர்ணயக் குழுவில் கல்லூரித் தாளாளர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது போல், மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளித் தாளாளர்களுக்கும் தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழுவில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என கடலூர் மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் நிர்வாகிகள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கடலூர் மாவட்ட மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் சங்க அவசர பொதுக்குழுக் கூட்டம் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்றது. மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்எல்சியுமான சி.ஆர்.லட்சுமிகாந்தன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் வீனஸ் எஸ்.குமார் வரவேற்று கோரிக்கைகளை விளக்கினார். துணைத் தலைவர் பரிமளா வாகீசன், நர்சரி பள்ளி சங்கத் தலைவர் மோகனன், வீனஸ் மெட்ரிக் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜி.மகேஷ்சுந்தர், செந்தில்குமார் உள்ளிட்டோர் பேசினர்.

கட்டண நிர்ணயக் குழுவால் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள ஜூலை இறுதிவரையிலான கட்டண கோரிக்கை விசாரணை முறையை ரத்து செய்து, ஒரே சமயத்தில் 32 மாவட்ட தலைநகரங்களில் பள்ளிகளின் கட்டணக் கோரிக்கையை விசாரணை செய்து மே மாத இறுதிக்குள் கட்டண நிர்ணய ஆணையை வெளியிட வேண்டும்.2013-14-ம் கல்வி ஆண்டுக்கான நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு குறைந்தபட்ச கட்டணமாக கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.15 ஆயிரம், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.20 ஆயிரம், 9 மற்றும் 10-ம் வகுப்புக்கு ரூ.25 ஆயிரம், 11 மற்றும் 12-ம் வகுப்புக்கு ரூ.30 ஆயிரம் என கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும்.உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி கட்டண நிர்ணயம் தொடர்பான அனைத்து கோட்பாடுகளையும் கட்டண நிர்ணயக் குழு பின்பற்றி, ஆண்டுதோறும் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக அனைத்து பணிச் சலுகைகளையும் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, மடிக்கணினி உள்ளிட்ட இலவசப் பொருள்கள், பஸ்பாஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும்.கிராமப் பஞ்சாயத்துகளில் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு விதிக்கப்படும் சொத்துவரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.