ஸ்ரீவல்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மாணவ மாணவியர் சிட்டுக்குருவியின் சிறப்புகள் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திக்காட்டினர்.
ஆசிரியை ந.ரெங்கலதா சிறப்புரையாற்றுகையில் கூறியதாவது: சிட்டு போல விரைவாக பறப்பதாலும், உருவில் சிறியதாக இருப்பதாலும் இந்த வகைக் குருவிகளுக்கு சிட்டுக்குருவி என்று பெயர் வந்தது. மேலும் வீட்டுக்குருவிகள், அடைக்கலாங் குருவிகள், ஊர்க்குருவிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறகடித்து பறந்து கொண்டிருந்த சிட்டுக்குருவிகளை இன்று எங்குமே பார்க்க முடியாத வகையில் அவை காணால் போய்விட்டனர்.
சிட்டுக்குருவி இனத்தை அழியாமல் காப்பாற்றுவதற்காக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆண்டுதோறும் மார்ச் 20-ம் தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக அறிவித்து அவற்றை பாதுகாக்க போராடி வருகிறார்கள்.
தற்போது சுற்றுச் சூழல் மாற்றங்களால் மரங்களும், பறவைகளும் அழிவதுடன், உலகமும் வெப்பமயமாகி இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுகிறது. செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் மின்காந்த அலைகளின் தாக்கம் சிட்டுக்குருவிகளின் இனப்பெருக்க மண்டலத்தைத் தாக்குகின்றன. இதனால் குருவிகள் மலடாகி போவதால், தங்கள் இனத்தை பெருக்க முடியவில்லை. இதனால் ஒரு சில நகரங்களில் சிட்டுக்குருவி இனம் முற்றிலும் அழிந்துவிட்டன.
அதேபோல் பூச்சிக்கொல்லி மருந்துகளை தானியங்கள், பயிர்கள் மற்றும் செடிகளுக்குத் தெளிப்பதால், அதனை உண்ணும் சிட்டுக்குருவி முட்டை தோல் கடினத் தன்மை இன்றி எளிதில் உடைந்து விடுவதால் இனப்பெருக்கம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. பருந்துகளும் தங்கள் உணவாக சிட்டுக்குருவிகளை அடித்துச் சாப்பிடுவதாலும் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருகிறது. இதனைப் பாதுகாக்க மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர். பின்னர் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

