சேலம் மெய்யனூரில் பெண்ணை கழுத்தை அறுத்து படுகொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் காசக்காரனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (45). இவரது மனைவி சாந்தி (40). இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்த நிலையில் சாந்திக்கும் சுப்பிரமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதற்கிடையே ஜாகிர் ரெட்டிப்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (46) என்பவருக்கும் சாந்திக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சூரமங்கலம் பகுதியில் வசித்து வந்த சாந்தி, தையல் கடை நடத்தி வந்தார். மேலும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் பாலசுப்பிரமணி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மெய்யனூர் ஆலமரத்துக்காடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சாந்தியை குடியமர்த்தினார். இந்த வீட்டுக்கு பாலசுப்பிரமணி அவ்வப்போது வந்து செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சாந்தியின் வீட்டில் இருந்து இன்று காலை அதிக சத்தத்துடன் தொலைக்காட்சி இயங்கிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டைத் திறந்து பார்த்தபோது, சாந்தி கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தது தெரிய வந்தது.இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து பள்ளப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஏ.ஜி.பாபு தலைமையிலான ஏராளமான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
சாந்தியின் வீட்டில் பதிந்திருந்த கைரேகைகளை நிபுணர்கள் பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாய் மூலமும் சோதனை நடத்தப்பட்டது. சாந்தியை கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும் கைப்பற்றப்பட்டுள்ளது.சாந்தி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் பாலசுப்பிரமணி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் நேற்று முழுவதும் சாந்தியின் வீட்டுக்கு வரவில்லை என்று கூறினார். இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தவறான நடத்தையால் ஏற்பட்ட தகராறு காரணமாகவே சாந்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கமலேசன் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

