ஒகேனக்கல் மணல்திட்டில் சிக்கி பெங்களூரைச் சேர்ந்த 4 இளைஞர்கள் பலி
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே கூடுதுறை மணல்திட்டு பகுதியில் பெங்களூரில் இருந்து சுற்றுலா வந்த 4 இளைஞர்கள் நீர்ச் சுழலில் சிக்கி உயிரிழந்தனர்.


தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே கூடுதுறை மணல்திட்டு பகுதியில் பெங்களூரில் இருந்து சுற்றுலா வந்த 4 இளைஞர்கள் நீர்ச் சுழலில் சிக்கி உயிரிழந்தனர்.
பெங்களூரைச் சேர்ந்த 12 பேர் 6 இரு சக்கர வாகனங்களில் இன்று மே தினம் என்பதால், விடுமுறைக்கு ஒகேனக்கல் வந்தனர். அவர்கள் ஒகேனக்கல் மணல்திட்டு பகுதியில் ஆழம் தெரியாமல் சென்றபோது, ஒருவர் நீர்ச் சுழலில் சிக்கினார். அவரைக் காப்பாற்றுவதற்காகச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கினர். நீரில் மூழ்கிய நாகேஷ் (25), விஜி (26), ராஜீவ் (25), நந்தா (22) ஆகியோரின் சடலங்கள் பரிசல் ஓட்டுபவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டன.
உயிரிழந்த நால்வரும் பெங்களூரில் பணிபுரியும் தனியார் நிறுவன ஊழியர்கள், அலுவலக உதவியாளர்களாகப் பணிபுரிகிறார்கள் என்று நண்பர்கள் கூறினர். இதனிடையே முதலில் நீரில் மூழ்கியவர் காப்பாற்றப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். இது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...