திருச்சுழி அருகே குடிபோதையில் மனைவியை அரிவளால் வெட்டிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறியதாவது: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அம்மன்பட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து என்பவரின் மனைவி பூமயில்(28). இவரது கணவர் புதன்கிழமை இரவு அதிகமாக குடித்து விட்டு தெருவில் கண்டபடி பேசி தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக அத்தெருப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பூமயிலிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, குடிபோதையில் இருந்த கணவரை மனைவி தட்டிக் கேட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த மாரிமுத்து அருகில் வைத்திருந்த அரிவாளால் மனைவியை பல்வேறு இடங்களில் வெட்டியதால் படுகாயம் அடைந்தார்.
இதனால், படுகாயம் அடைந்த பூமயிலுக்கு கமுதி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகி்சசை பெற்று வருகிறார். இது குறித்து பூமயில் திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கணவர் மாரிமுத்துவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக தலைமையிலானது கொள்கைக் கூட்டணி! - கனிமொழி எம்.பி.

லஞ்சம் பெறாமல் மக்கள் பணியாற்றுவேன்: நாதக வேட்பாளா் அருண்குமாா்

100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயா்த்தப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி. பிரபு
பேரவைத் தோ்தல்கள்! 11,000 சமூக ஊடக பதிவுகள் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

