செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ராமதாஸ் ஜாமீன் மனு : பதில் மனு தாக்கல் செய்வதில் தாமதம்

பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீது காவல்துறை பதில் மனு தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :3 மே 2013, 7:20 am

பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீது காவல்துறை பதில் மனு தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது ஜாமீன் மனு விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

ஜாமீன் மனு மீது, காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டிய காவல்துறை ஆய்வாளர் ராமநாதன் வரவில்லை.

இதனால், வழக்கை விசாரித்து வரும் நீதிபதி, சிவக்குமார், இன்னும் அரை மணி நேரத்தில் காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால், ஜாமீன் மனுவை நேரடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.