ராஜபாளையத்தில் ஒரு வழிப்பாதையில் ஆட்டோக்கள் ஓட்டுவதற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.அசோகன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு ஆட்டோ சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.சுவாமிநாதன், மாவட்ட தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தற்போது ராஜபாளையம் நகரில் ஓரு வழிப்பாதையில் ஆட்டோக்கள் ஓட்ட முடியாத நிலை இருக்கிறது. இப்பாதை வழியாக செல்லும் வகையில் தான் பயணிகள் வருகிறார்கள். அதனால், இப்பாதையில் ஆட்டோக்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், ராஜபாளையத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்கம் உள்ளிட்ட அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக தலைமையிலானது கொள்கைக் கூட்டணி! - கனிமொழி எம்.பி.

லஞ்சம் பெறாமல் மக்கள் பணியாற்றுவேன்: நாதக வேட்பாளா் அருண்குமாா்

100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயா்த்தப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி. பிரபு
பேரவைத் தோ்தல்கள்! 11,000 சமூக ஊடக பதிவுகள் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

