மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

உலகத் தமிழ் மாநாடு நடத்த கம்யூனிஸ்ட் கோரிக்கை

அதிமுக ஆட்சியில் உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டும். இந்திய திரைப்படத் துறையின் நூற்றாண்டு விழா அண்மையில் தில்லியில் நடைபெற்றது. அதில் தமிழ் திரைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு தனது

Updated On :7 மே 2013, 1:59 pm

அதிமுக ஆட்சியில் உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் கே. லிங்கமுத்து (குடியாத்தம்) கோரிக்கை விடுத்தார்.

பேரவையில் நடைபெற்ற செய்தி, விளம்பரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:-

அதிமுக ஆட்சியில் உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டும். இந்திய திரைப்படத் துறையின் நூற்றாண்டு விழா அண்மையில் தில்லியில் நடைபெற்றது. அதில் தமிழ் திரைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு தனது கண்டனத்தை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் கருணைத் தொகையை அதிகரிக்க வேண்டும். அதிகரித்து வரும் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில்,பத்திரிகையாளர்கள் மரணமடைந்தால் அவர்கள் பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையில் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை கருணைத் தொகை வழங்கப்படுகிறது. ஆண்டு கணக்கில்லாமல் கருணைத் தொகை வழங்க வேண்டும்.தொலைக்காட்சிகளில் வரும் நெடுந்தொடர்கள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவே, தொலைக்காட்சித் தொடர்களில் வரும் காட்சிகளை ஒழுங்குபடுத்த சென்சார் போர்டு அமைக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.