மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இந்து முன்னணி பிரச்சார உறுப்பினரை தாக்கிய சார்பு ஆய்வாளர் மீது எஸ்.பியிடம் புகார்

விருதுநகர், பாண்டியன் நகரில் உள்ள வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் செல்லத்துரையின் மகன் ராஜா(35). இவர் இந்து முன்னணி இயக்கத்தில் முழுநேர ஊழியராக இருந்து வருகிறார். தற்போது, நாகைப் பகுதியில் பிரச்சார

Updated On :8 மே 2013, 12:36 pm

இந்து முன்னணி பிராச்சார உறுப்பினரை தாக்கிய எஸ்.ஐ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேசனிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேசனுக்கு அனுப்பியுள்ள மனுவில், இந்து முன்னணி பிரச்சார உறுப்பினர் செ.ராஜா தெரிவித்திருப்பதாவது:

விருதுநகர், பாண்டியன் நகரில் உள்ள வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் செல்லத்துரையின் மகன் ராஜா(35). இவர் இந்து முன்னணி இயக்கத்தில் முழுநேர ஊழியராக இருந்து வருகிறார். தற்போது, நாகைப் பகுதியில் பிரச்சார உறுப்பினராக  பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் எனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக விருதுநகருக்கு வந்துள்ளேன். கடந்த திங்கள்கிழமை கலைஞர் நகரில் உள்ள எனது சகோதரியின் வீட்டிற்கு மதுரைச் சாலை வழியாக சென்றேன். அப்போது அங்கிருந்த பாண்டியன் நகர் காவல் நிலைய போலீஸார் பாண்டியன் என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த சார்பு ஆய்வாளர் பார்த்திபன் உன்னைப்பார்த்தால் தீவிரவாதி போல் தெரிகிறது என்றார்.

அதையடுத்து, என்னைப் பற்றிய முழு விவரங்களையும் குறிப்பிட்டும், போலீஸார் என்னைப்பிடித்துக் கொள்ள சார்பு ஆய்வாளர் பார்த்திபன் லத்தியால் எனது உடல் பகுதியில் பல்வேறு இடங்களில் தாக்கினார். மேலும், மாநில தலைவர் கோபால்ஜியிடம் தொடர்பு கொள்ளுமாறு கூறினேன், அதற்கு மறுத்த நிலையில் அவரையும் கண்டபடி பேசினார். பின்னர் என்னிடம் இருந்த ரொக்கத்தையும், கைபேசியையும் எடுத்துக் கொண்டு கைவிலங்கு போட்டு மறுபடியும் தாக்கினார்.இதையடுத்து, எங்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு தகவல் தெரிந்து காவல் துறை துணைக் கண்காணிப்பாளரிடம் விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையிலேயே என்னை காயத்துடன் விடுவித்தனர். பின்னர் வலி தாங்க முடியாமல் விருதுநகர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறேன். அதனால், காவல் துறை விதிமுறைகளை மீறி விசாரணைக்கு அழைத்துச் சென்று கண்மூடித்தனமாக தாக்கிய சார்பு ஆய்வாளர் பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேசனுக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.