மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சுமங்கலித் திட்டம் உள்ள ஆலைகள் மீது உடனடி நடவடிக்கை: அமைச்சர் உறுதி

சட்டப்பேரவையில் நடைபெற்ற தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம். ஆறுமுகம் (வால்பாறை), கோவை சில பஞ்சாலைகளில் பயிற்சியாளர் என்ற பெயரில் சுமங்கலித் திட்டத்தை மறைமுகமாக செயல்படுத்தி வருகின்றனர்

Updated On :8 மே 2013, 2:14 pm

கோவையில் சுமங்கலித் திட்டத்தை செயல்படுத்தும் பஞ்சாலைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சி.த. செல்லபாண்டியன் உறுதி அளித்தார்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம். ஆறுமுகம் (வால்பாறை), கோவை சில பஞ்சாலைகளில் பயிற்சியாளர் என்ற பெயரில் சுமங்கலித் திட்டத்தை மறைமுகமாக செயல்படுத்தி வருகின்றனர். இததிட்டத்தின் மூலம் இளம் பெண்களை அடைத்து வைத்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 30 ஆயிரம் கொடுத்து அனுப்பும் அவலம் தொடர்கிறது. எனவே, இந்த ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அவருக்குப் பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:

பயிற்சியாளர் என்ற பெயரில் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக உறுப்பினர் குற்றம்சாட்டுகிறார். இதுவரை அதுபோன்ற புகார்கள் எதுவும் அரசுக்கு வரவில்லை. கோவையில் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆலைகளில் உடனடியாக ஆய்வு நடத்தி, சுமங்கலித் திட்டம் இருப்பது உண்மையானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.