செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

எவ்வித வசதியும் இல்லாமல் கஷ்டப்பட்டேன் : ராமதாஸ்

சிறைக்குள் எவ்வித வசதியும் இல்லாமல் கஷ்டப்பட்டேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 மே 2013, 4:46 am

சிறைக்குள் எவ்வித வசதியும் இல்லாமல் கஷ்டப்பட்டேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று காலை திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமதாஸ், அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அறிவிக்கப்படாத, அறிவிக்க முடியாத ஒரு அவசரகால நிலை பாமக மீதும், வன்னிய சமுதாய மக்கள் மீதும் இந்த அரசு அறிவிக்காமல் அறிவித்திருக்கிறது.

பாமகவினரை கைது செய்யாமல் இருந்திருந்தால் இந்த வன்முறைகள் எதுவும் நடந்திருக்காது. விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டு வன்முறைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். எந்தவித அடிப்படை வசதிகளும்  இல்லாமல் கடந்த 12 நாட்களாக நான் சிறையில் இருந்தேன். உங்களை எல்லாம் மீண்டும் வந்து சந்திப்பேன் என்று நான் நினைக்கவில்லை.

வரும் நாடாளுமன்ற தேர்தலில், தலித் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக முதல்வர் ஜெயலலிதா இந்த அடக்குமுறையை எங்கள் மீது ஏவி இருக்கிறார் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.