சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் உதவிப் பேராசிரியர் ஆகிய இருவரை வேறு மாநிலங்களில் உள்ள படிப்பு மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றிய செந்தில், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள தொலைதூரக்கல்வி இயக்கக படிப்பு மையத்திற்கும், தொலைதூரக்கல்வி மையத்தில் உதவிப் பேராசிரியராக இருந்த முருகையன் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள படிப்பு மையத்திற்கும் இடமாற்றம் செய்து பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேற்கண்ட இருவரும் முன்பு இருந்த நிர்வாகத்தில் மாணவர்கள் அனுமதி சேர்க்கை, ஆசிரியர்-ஊழியர் பணி நியமனங்கள் பெற்றுத் தந்ததாக கூறப்பட்ட புகாரை அடுத்து இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது.
இன்று படிப்பு மைய அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு: அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தின் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள படிப்பு மையங்களின் பொறுப்பு அதிகாரிகள் 28 பேருக்கு திங்கள்கிழமை பல்கலைக்கழக செனட் ஹாலில் நடைபெறும் கூட்டத்திற்கு வருமாறு பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா அழைப்பு விடுத்துள்ளார். எதற்காக அழைத்துள்ளார் என்ற காரணம் தெரியாததால் தனிஅலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பணிகளுக்கு இன்று எழுத்துத் தோ்வு: மையங்களில் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதியுலா: திரளான பக்தா்கள் தரிசனம்

மாயூரநாதா் கோயிலில் வைகாசி விசாக தீா்த்தவாரி
இன்றைய ராசி பலன் (30.05.2026) - கும்பம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


