நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

ஆட்சியர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு: விஸ்வநாதன் எம்.பி.

மகாத்மா காந்தி ஊரக தேசிய திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இத்திட்டங்கள் மாநில அரசு மூலம் மாவட்டங்களில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்காணிக்க மாவட்ட கண்காணிப்புக்குழு

Updated On :12 மே 2013, 3:32 pm IST

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு தொடுக்கப்படும் என்று விஸ்வநாதன் எம்.பி. தெரிவித்தார்.

மகாத்மா காந்தி ஊரக தேசிய திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இத்திட்டங்கள் மாநில அரசு மூலம் மாவட்டங்களில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்காணிக்க மாவட்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்புக் குழுவின் தலைவராக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டி.ஆர். பாலுவும், துணைத் தலைவராக காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பெ. விஸ்வநாதனும், செயலாளராக மாவட்ட ஆட்சியரும் உள்ளனர்.

மேலும், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நகர்மன்ற, ஊராட்சி ஒன்றிய, பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். 3 மாதங்களுக்கு ஒரு முறை இக்குழு கூடி மத்திய அரசு திட்டத்தின் செயல்பாடு குறித்து விவாதிக்கும். மேலும் அதில் உள்ள குறைபாடுகள், மாவட்டத்தில் எட்டியுள்ள இலக்குகள் குறித்தும் பேசப்படும்.தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இக்கூட்டம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. 2011 ஜூலை 21-ஆம் தேதி மாவட்டக் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த இரு ஆண்டுகளாக இக்கூட்டம் நடைபெறவில்லை.

மே 13-ம் தேதி மாவட்டக் கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன், குழுவின் தலைவர் டி.ஆர். பாலு, துணைத் தலைவர் பெ. விஸ்வநாதன் உள்ளிட்ட அனைவருக்கும் கடந்த வாரம் கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில் இக்கூட்டத்தை ஒத்தி வைப்பதாக மாவட்ட ஆட்சியர், பெ. விஸ்வநாதன் எம்.பி. உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில் ஆட்சியர் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சட்டப்பேரவைக் கூட்டம் இப்போது நடைபெற்று வருகிறது. எனவே சட்டப்பேரவை உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத நிலையில் உள்ளனர். அதன் அடிப்படையில் மே 13-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாவட்ட கண்காணிப்புக்குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. குழுத் தலைவருடன் கலந்து ஆலோசனை செய்து மீண்டும் இக்கூட்டம் நடைபெறும் தேதி முடிவு செய்யப்படும் என்று அக்கடித்தில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விஸ்வநாதன் எம்.பி. கூறியது: கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெறும் தேதியை முடிவு செய்த போது, சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுவது மாவட்ட ஆட்சியருக்கு தெரியாதா? சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுவதால், இந்த தேதியில் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள இயலாது என்று தெரிந்தும், மே 13-ம் தேதி கண்காணிப்புக் குழுக் கூட்டத்துக்கு நாள் குறிக்கப்பட்டது வேடிக்கையாக உள்ளது. இதன் மூலம் மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறதா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மாவட்டத்தில் அரசு இயந்திரம் முடங்கிக் கிடக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. எனவே செயல்படாத மாவட்ட நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்து ஆட்சியர் மீது காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்றார் விஸ்வநாதன் எம்.பி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.