திருவாரூர்-மயிலாடுதுறை இடையே ஞாயிற்றுக்கிழமை பயணிகள் ரயில் சேவை தொடங்கியது.
திருவாரூர் - மயிலாடுதுறை அகல ரயில்பாதை அமைக்கும் பணி கடந்த 2009 ல் தொடங்கப்பட்டு 2012-ல் நிறைவடைந் தது. கடந்த ஆண்டு, முதலில் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விரைவு ரயில் போக்குவரத்துச் சேவைத் தொடங்கியது. இந்நிலையில் தற்போது பயணிகள் ரயில் சேவை தொடங்கியுள்ளது.
திருவாரூர் மயிலாடுதுறையில் நாள்தோறும் காலை மாலை பயணிகள் ரயில் போக்குவரத்து இயக்கப்படுகிறது. மயிலாடுதுறையில் காலை 6.20 மணிக்கு புறப்பட்டு 7.35 மணிக்கு திருவாரூர் ரயில் நிலையத்துக்கு வந்து சேருகிறது. இதே போல் திருவாரூரிலிருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு மயிலாடுதுறை சென்றடைகிறது.
இதே போல் மாலை 6.10 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்தும், இரவு 8.40 திருவாரூரிலிருந்து பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறைகள் யார் எவருக்கு?

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஆயுதத் தொழிற்சாலையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வேலை!

எந்தெந்த தெய்வங்களிடம் என்னென்ன பிரார்த்தனை வைக்கலாம்?
தமிழ்நாட்டின் இளம் அமைச்சரானார் கமலி!
விடியோக்கள்

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |


