சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

பசுந்தீவணம் சாகுபடி செய்ய அரசு மான்யம்: மாவட்ட ஆட்சியர்

தமிழக முதல்வரால் விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அவற்றிற்கு பசுந்தீவணம் அளிப்பதன் முக்கியத்துவத்தை

Updated On :12 மே 2013, 4:26 pm IST

திருவள்ளூர் மாவட்டத்தில் வறட்சி நிவாரணத் திட்டத்தின்கீழ் பசுந்தீவணம் சாகுபடி செய்ய அரசு மானியம் வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் கொ. வீர ராகவ ராவ் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

தமிழக முதல்வரால் விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அவற்றிற்கு பசுந்தீவணம் அளிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்த தமிழக அரசு,கால்நடைகளுக்கு ஆண்டு முழுவதும் பசுந்தீவணம் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக மாநில தீவண

விரைவு அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் தீவணப்புல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டிலும் பசுந்தீவணம் சாகுபடிக்கு அரசு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தேவையான விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகி பயன்பெறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.