இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

புதிய கண்டுபிடிப்புகள் மூலம் வலியைமான நாட்டை உருவாக்க வேண்டும்:  ரோசய்யா

திருவள்ளூரை அடுத்த ஆவடி வேல்டெக் கல்லூரியின் 15-வது பட்டமளிப்பு விழா மற்றும் நிறுவனத் தலைவர் ரங்கராஜனின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. கல்லூரியின் துணைத் தலைவர் சகுந்தரா ரங்கராஜன், அறங்காவலர் குழு தலைவர் ரங்கராஜன் மகாலட்சுமி ஆகியோர்

News image
Updated On :12 மே 2013, 3:16 pm IST

புதிய கண்டுபிடிப்பின் மூலம் மாணவர்கள் வலிமையான  நாட்டை உருவாக்க வேண்டும் என வேல்டெக் பொறியியல் கல்லூரியின் 15-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ரோசய்யா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

திருவள்ளூரை அடுத்த ஆவடி வேல்டெக் கல்லூரியின் 15-வது பட்டமளிப்பு விழா மற்றும் நிறுவனத் தலைவர் ரங்கராஜனின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. கல்லூரியின் துணைத் தலைவர் சகுந்தரா ரங்கராஜன், அறங்காவலர் குழு தலைவர் ரங்கராஜன் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேல்டெக் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ஆர்.பி.பாஜ்பாய் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக ஆளுநர் ரோசய்யா பங்கேற்று ரங்கராஜனின் சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து அண்ணா பல்கலை தேர்வில் சிறந்து விளங்கிய 17 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் 550 மாணவர்களுக்கு பட்டம் வழங்கிப் பேசியது: நல்ல கல்வியின் அடையாளம் பட்டம் பெறுவதுடன் நிற்பதல்ல. தொலை நோக்குப் பார்வையும், சிந்தனையும் வேண்டும். அதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து நாட்டை வலிமையான நாடாக உருவாக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் ஹேமாமகேஸ்வரி, ஸ்ரீனிவாஸ், கிஷோர்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.