பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை: பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் கைது

கரூர் பல்வேறு இடங்களில் லாட்டரி சீட்டு விற்கப்படுவதாகவும் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார்

Updated On :12 மே 2013, 4:47 pm IST

கரூரில் அண்மையில் போலீஸார் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் பல்வேறு இடங்களில் லாட்டரி சீட்டு விற்கப்படுவதாகவும் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் அண்மையில் 2 நாள்கள் மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்றதாக வெங்கமேட்டைச் சேர்ந்த ராஜா, கரூர் தேர் வீதியைச் சேர்ந்த சுந்தரம், பங்களாத் தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி, தான்தோன்றி்மலை ராஜேந்திரன், பள்ளப்பட்டி சவுந்திராபுரம் கருப்புச்சாமி, மகாதானபுரத்தைச் சேர்ந்த தமிழரசன், எழுநூற்றுமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர், பெட்டாவாய்த்தலையைச் சேர்ந்த ஞானசேகர், கிழக்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஆண்டிவடிவேல் ஆகிய 9 பேரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

விபசார வழக்கில் 8 பேரும், யாகூப் என்பவர் 500 கிராம் கஞ்சா வைத்திருந்ததாகவும் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் உள்ள 6 வெடிமருந்து குடோன்களும் தணிக்கை செய்யப்பட்டது. பழைய குற்றவாளிகள் 39 பேர் சோதனையிடப்பட்டனர்.  அனுமதி பெறாமல் இரட்டை மாட்டு வண்டியில் மணல் அள்ளியதாக 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மதுபானங்களை அனுமதியின்றி விற்றதாக 27 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபம், தங்கும் விடுதிகள் 230 தணிக்கை செய்யப்பட்டதில், சந்தேக நபர்களை விசாரணை செய்து 45 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.