இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தென்கொரிய அதிபரின் செய்தித் தொடர்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு: மன்னிப்பு கோரியது அதிபர் அலுவலகம்

கடந்த பிப்ரவரி மாதம் தென்கொரிய் அதிபராக பொறுப்பேற்ற பார்க் முதன்முறையாக கடந்த வாரம் (மே 5 - 9) அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். இந்தப் பயணத்தின்போது, அவருடன் சென்றிருந்த செய்தித்

Updated On :12 மே 2013, 3:57 pm IST

தென்கொரிய அதிபர் பார்க் கியூன்-ஹையின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதற்கு அதிபர் அலுவலகம் மன்னிப்பு கோரி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தென்கொரிய் அதிபராக பொறுப்பேற்ற பார்க் முதன்முறையாக கடந்த வாரம் (மே 5 - 9) அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். இந்தப் பயணத்தின்போது, அவருடன் சென்றிருந்த செய்தித் தொடர்பாளர் யூன் சாங்-ஜங், கொரிய அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, நாடு திரும்புவதற்கு முன்பே யூன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதிபர் அலுவலக தலைமை அதிகாரி ஹியூ டே-இயோல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

யூன் தலைகுனிவை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளார். அது ஒரு வெட்கக் கேடான சம்பவம். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். மேலும் நாட்டு மக்களிடமும், வெளிநாடுகளில் வசிக்கும் கொரிய மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று, அதிபரின் தலைமை செய்தித் தொடர்பாளர் லீ நாம்-கியும் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார் என அந்த அதிகாரி தெரிவித்தார். எனினும், அது ஏற்கப்பட்டதா என்பதை தெரிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.