பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

தில்லி விமான நிலையத்தில் பெண் பயணியிடம் ரூ. 91 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

தில்லி விமான நிலையத்தில் பெண் பயணியிடம் ரூ. 91 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

News image

தில்லி விமான நிலையம் - ANI

Updated On :31 மே 2026, 6:30 am IST

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில், பாங்காக்கிலிருந்து வந்த இந்தியப் பெண் பயணியிடமிருந்து ரூ.91 லட்சம் மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக சனிக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மே 29 அன்று பாங்காக்கில் இருந்து தில்லி வந்தடைந்த அந்தப் பெண் பயணி, விமான நிலையத்தில் உள்ள சுங்கத் துறையின் பசுமை வழித்தடத்தைக் கடந்தபோது இடைமறிக்கப்பட்டாா்.

அவரிடம் சோதனையிட்டபோது, அவா் வைத்திருந்த சூட்கேஸ் வழக்கத்திற்கு மாறாக கனமாக இருந்ததை அதிகாரிகள் கண்டனா். விரிவான சோதனையின்போது, சாமான்களின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ஹைட்ரோபோனிக் கஞ்சா என சந்தேகிக்கப்படும் பச்சை நிறப் பொருள் அடங்கிய இரண்டு பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்தப் பொட்டலங்கள் சாமான்களுக்குள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன. மீட்கப்பட்ட கடத்தல் போதைப் பொருளின் எடை சுமாா் 2.6 கிலோ ஆகும். அதன் மதிப்பு ரூ. 91 லட்சம் என சுங்கத்துறை மதிப்பிட்டுள்ளது.

சந்தேகிக்கப்படும் இந்த போதைப்பொருள், போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.