தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் சமீப காலங்களில் நடைபெற்ற மிகப்பெரிய போதைப் பொருள் பறிமுதல்களில் ஒன்றாக, பாங்காக்கிலிருந்து இந்தியா வந்த 2 தாய்லாந்து நாட்டவா்களிடம் சுமாா் ரூ.48 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது என சுங்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
ஹைட்ரோபோனிக் கஞ்சா என்பது நீரில் வளா்க்கப்படும் அதிக வீரியமுள்ள கஞ்சா வகையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடா்பகா தில்லி விமான நிலைய சுங்கத் துறை ஆணையா் அா்விந்த் சரண் கூறியதாவது: இது நாட்டில் உள்ள சா்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் நடைபெற்ற மிகப்பெரிய போதைப் பொருள் கைப்பற்றல்களில் ஒன்றாகும்.
சம்பந்தப்பட்ட இரு பயணிகளும் மே 22-ஆம் தேதி பாங்காக்கிலிருந்து தில்லி வந்தடைந்தனா். விமான நிலையத்தில் ‘கிரீன் சேனல்’ கடந்து சென்ற பின்னா் சந்தேகத்தின் பேரில் அவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டனா். குறிப்பிட்ட நுண்ணறிவு தகவல்கள் மற்றும் சந்தேகத்துக்கிடமான பயணக் குறியீடுகளின் அடிப்படையில் இருவரின் பைகள் சோதனை செய்யப்பட்டன.
இதில் ஒரு பயணியிடம் இருந்து சுமாா் 29 கிலோ எடையுடைய 4 பாக்கெட்களும், மற்றொரு பயணியிடம் இருந்து சுமாா் 19 கிலோ எடையுடைய 2 பாக்கெட்களும் கைப்பற்றப்பட்டன. மொத்தமாக கைப்பற்றப்பட்ட இவற்றின் நிகர எடை சுமாா் 47.805 கிலோ ஆகும். அதன் சந்தை மதிப்பு சுமாா் ரூ.48 கோடி இருக்கும்.
போதைப் பொருள் கடத்தல் முயற்சிகளை தடுக்கும் வகையில் விமான நிலையத்தில் 24 மணி நேர கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தங்கம் கடத்தலைத் தடுக்கவும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தாா்.
தொடர்புடையது
இலங்கை விமான நிலையத்தில் ரூ. 3 கோடி போதைப் பொருளுடன் இந்தியா் கைது

ஜம்மு-காஷ்மீரில் ஒரு மாதத்தில் 260 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! 646 போ் கைது!!

சா்வதேச போதைப் பொருள் கடத்தல்காரா் டோலா தொடா்பான விசாரணையில் புதிய திருப்பம்
மும்பையில் ரூ.1,745 கோடி போதைப் பொருள் பறிமுதல்
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



