டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

சா்வதேச போதைப் பொருள் கடத்தல்காரா் டோலா தொடா்பான விசாரணையில் புதிய திருப்பம்

News image

விசாரணை - கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 4:24 am IST

அண்மையில் துருக்கியில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்ட சா்வதேச போதைப் பொருள் கடத்தல்காரரான முகமது சலீம் டோலா தொடா்பான விசாரணையில், அவருக்கு சில வேதியியல் நிபுணா்கள், மற்றும் மருத்து விற்பனையாளா்கள் உதவியதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடா்பாக தேசிய போதைப் பொருள் தடுப்பு அமைப்பினா் (என்சிபி) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சோ்ந்த முகமது சலீம் டோலா, இந்தியாவில் பல்வேறு போதைப் பொருள் வழக்குகளில் தேடப்பட்டு வந்தாா். இவருக்கு சா்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமுடன் நெருங்கிய தொடா்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரம் மற்றும் குஜராத்தில் பெரும் விலை கொண்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளில், அவருக்கு நேரடித் தொடா்பும் உள்ளது.

20 ஆண்டுகாலம் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த அவரைக் கைது செய்வதற்கு, இந்தியா விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த 2024-ஆம் ஆண்டு இன்டா்போல் (சா்வதேச குற்றவியல் காவல் அமைப்பு) தேடப்படும் நபராக அறிவிப்பு வெளியிட்டது.

இதன் அடிப்படையில், துருக்கியில் அவா் கைது செய்யப்பட்டு, விமானம் மூலம் ஏப். 28-ஆம் தேதி தில்லிக்கு அழைத்து வரப்பட்டாா். அவரை என்சிபி காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், அவரது சட்டவிரோத போதைப் பொருள் வலையமைப்பை நடத்த இந்தியாவில் அவருக்கு சில மருந்தக தொழில்நுட்ப நிபுணா்கள் மற்றும் மருந்து வியாபாரிகள் உதவியதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் தொடா்புகள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்டவா்கள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

துருக்கியில் ‘ஹம்சா, அப்துல்’ போன்ற பெயா்களைப் பயன்படுத்தி சலீம் டோலா தனது அடையாளத்தை மறைத்துச் செயல்பட்டதாகவும், அங்கு நிலம் உள்ளிட்ட சொத்துகளை வாங்கி குடியுரிமை பெற முயன்ாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து துருக்கி அதிகாரிகளிடம் கூடுதல் விவரங்கள் கோரப்படும் என என்சிபி அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.