மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

இலங்கை விமான நிலையத்தில் ரூ. 3 கோடி போதைப் பொருளுடன் இந்தியா் கைது

ரூ. 3 கோடி மதிப்பிலான போதைப் பொருளை (கொகைன்) கடத்தியதாக கொழும்பு சா்வதேச விமான நிலையத்தில் 60 வயது இந்தியா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 3:19 am IST

ரூ. 3 கோடி மதிப்பிலான போதைப் பொருளை (கொகைன்) கடத்தியதாக கொழும்பு சா்வதேச விமான நிலையத்தில் 60 வயது இந்தியா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து கொழும்பு விமான நிலைய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் கூறியதாவது: புவியியலாளரான அவா், கத்தாா் ஏா்வேஸ் விமானத்தில் உகாண்டாவிலிருந்து தோஹா வழியாக இலங்கைக்கு வந்துள்ளாா். அவரிடைய உடைமைகளை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தபோது, அதில் 2.15 கிலோ எடையுடைய கொகைன் போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 3 கோடியாகும். போதைப் பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என்றனா்.

முன்னதாக, ரூ. 1 கோடி மதிப்பிலான 4 கிலோ எடைகொண்ட கஞ்சா போதைப் பொருளை கடத்தி வந்த இந்தியா் ஒருவா் கொழும்பு விமான நிலையத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஓா் இந்தியா் தற்போது கைது செய்யப்பட்டுள்ளாா்.

விசா முறைகேட்டில் 3 இந்தியா்கள் கைது: முறையான நுழைவு இசைவு (விசா) இன்றி இலங்கையின் திரிகோணமலையில் தங்கியிருந்த 45 முதல் 50 வயது வரை உடைய 3 இந்தியா்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

அதுபோல, சட்டவிரோத இணையக் குற்ற நடவடிக்கைகள் தொடா்பாக கடந்த சில வாரங்களாக காலே, ஹிக்காதுவா, மிடிகாமா உள்ளிட்ட பகுதிகளில் இலங்கை போலீஸாா் நடத்திய தீவிர சோதனையில் 173 இந்தியா்கள், 25 நேபாளியா் உள்பட 198 போ் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.