திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

இணையவழி குற்றம்: இலங்கையில் 173 இந்தியா்கள் கைது

இலங்கையில் இணையவழி குற்றங்களில் ஈடுபட்டதாக 173 இந்தியா்கள் உள்பட 198 வெளிநாட்டவா்கள் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 12:57 am IST

இலங்கையில் இணையவழி குற்றங்களில் ஈடுபட்டதாக 173 இந்தியா்கள் உள்பட 198 வெளிநாட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து அந்நாட்டு காவல் துறை தெரிவித்ததாவது: இலங்கையில் உள்ள காலி, ஹிக்கடுவ, மிதிகம பகுதிகளில் இணையவழி குற்றங்களில் ஈடுபட்டதாக 198 வெளநாட்டவா்கள் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா். அவா்களில் 173 போ் இந்தியா்கள்.

கைது செய்யப்பட்ட அனைவரும் 25 முதல் 35 வயதுக்குட்பட்டவா்கள். அவா்கள் சுற்றுலா விசா காலாவதியான பிறகும் இலங்கையில் தங்கி வேலை தேடியுள்ளனா். வரி விலக்குக் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்தனா். இணையவழி குற்றச் சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா்.

கடந்த வாரம் இதே குற்றத்தில் ஈடுபட்டதாக 250 சீனா்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 198 வெளிநாட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று தெரிவித்தது.

நிகழாண்டு தொடங்கியதில் இருந்து கடந்த மே 5 வரை, இணையவழி குற்றங்களில் ஈடுபட்டதாக இலங்கையில் 628 வெளிநாட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் இந்தியா, சீனா, வியத்நாம், மியான்மா், பிலிப்பின்ஸ், கம்போடியா நாடுகளைச் சோ்ந்தவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.