லக்னௌ விமான நிலையத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் பயணி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், சௌத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புச் சோதனையின்போது, 22 வயது பயணியின் பையிலிருந்து நாட்டுத் துப்பாக்கி கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தடுத்து வைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் சௌஹான் என்ற அந்தப் பயணி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் துபை செல்லவிருந்தபோது, அவரது பையில் இந்த ஆயுதம் கண்டறியப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், வழக்கமான பாதுகாப்புச் சோதனையில் இந்த ஆயுதம் மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விமான நிலைய அதிகாரிகள் சரோஜினி நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். விமான நிலைய அதிகாரி அளித்த புகாரின் பேரில், ஆயுதச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
” விமான நிலையத்தில் பயணியின் உடைமைகளை சோதனையிட்டபோது, அவரிடமிருந்து நாட்டுத் தயாரிப்பு 12-போர் கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டது. தற்போது அவர் கைது செய்யப்பட்டு, வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது,” என உதவி காவல் ஆணையர் ரஜ்னீஷ் வர்மா தெரிவித்தார்.
Summary
A 22-year-old passenger was detained at Chaudhary Charan Singh International Airport after a country-made pistol was recovered from his baggage during security screening here on Friday, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று ஹைதராபாத் விமான நிலையத்துக்கு!

துப்பாக்கியுடன் நீரஜ் பவானா ரெளடி கும்பலைச் சோ்ந்த இருவா் கைது

பாட்னா விமான நிலையத்தில் தோட்டாக்களுடன் நபர் கைது

தில்லி விமான நிலைய ஓடுபாதையை முடக்கிய கழுகு! தரையிறங்க முடியாமல் தவித்த விமானங்கள்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு



