கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

பிளஸ் 2 தேர்வில் குறைவான மதிப்பெண்: மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 9-ம் தேதி வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் நெல்லை மாவட்டத்தில் தென்காசி மற்றும் புளியங்குடியில் இரு மாணவிகள்

Updated On :12 மே 2013, 5:06 pm IST

பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மதி்ப்பெண் கிடைக்காததால் நெல்லை மாவட்டத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 9-ம் தேதி வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் நெல்லை மாவட்டத்தில் தென்காசி மற்றும் புளியங்குடியில் இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.மாவட்டத்தில் தேர்வில் குறைவான மதிப்பெண் கிடைத்ததால் மாணவியர் இருவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து மாவட்ட ஆட்சியர் சி. சமயமூர்த்தி வேதனை தெரிவித்திருந்தார். மாணவர், மாணவியருக்கு தற்கொலை எண்ணம் ஏற்படாத வகையில் பெற்றோர்கள் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டார்.

இந்நிலையில் பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மேலும் ஒரு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகேயுள்ள மேட்டு பிராஞ்சேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லையா மகள் செல்வலெட்சுமி (17). இவர் நல்லம்மாள்புரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் பிள்ஸ் 2 படித்தார்.கடந்த 9-ம் தேதி வெளியான பிளஸ் 2 தேர்வில் செல்வலெட்சுமிக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லையாம். இதனால் விரக்தியில் காணப்பட்ட அவர்,  நேற்று(சனிக்கிழமை) இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இரவு 11 மணியளவில் அவர் இறந்தார். இது தொடர்பாக கங்கைகொண்டான் போலீஸார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.