கடலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக், நாம் தமிழர் நடத்தும் இன எழுச்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் மே 17 நிகழ்வின் நினைவு தினப் பொதுக்கூட்டம் பேரணி நடத்த நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், இந்தப் பேரணிக்கும் பொதுக்கூட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டத்தை உள்ளரங்கில் வைத்து நடத்த நாம் தமிழர் கட்சியினர் முடிவு செய்தனர். அதன்படி, கடலூரில் சிதம்பரம் செல்லும் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் உள்ளரங்கு மாநாடாக இதனை நடத்துகின்றனர். தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படத்தைப் பயன்படுத்தியதால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுவதாக போலீஸார் கூறியுள்ள நிலையில், உள்ளரங்குக் கூட்டமாக நடக்கும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக்கும் கலந்து கொண்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே இந்தக் கூட்டம் தற்போது திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவின் தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: சிபிஐ மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்

ஏப்.19 முதல் 21 வரை தோ்தல் அலுவலா்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு
மறுவரையறை மசோதா தோல்வி கொண்டாட்டங்கள் கண்டிக்கத்தக்கவை: அமித் ஷா

தாமதமாக வந்ததால் பேச முடியாமல் சென்ற சசிகலா
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


