கரூரில் 43 ரேஷன் கடைகளில் ரூ. 17 ஆயிரம் மதிப்புக்கு முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் மா. சந்தானம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்:
கரூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்தும் நோக்கில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் 43 ரேஷன் கடைகளில் அண்மையில் கூட்டுறவுத் துறை அலுவலர்களால் பறக்கும்படை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், ரூ. 17,067 மதிப்பு அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள குடிமைப்பொருள்களை எந்தவிதமான முறைகேடுகளும் இல்லாமல் சரியான அளவுகளில், அனைத்து வேலை நாட்களிலும் அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தொடர்ந்து கண்காணித்திட அனைத்து கூட்டுறவு நிறுவனங்களின் தலைவர், செயலர்கள், பொது விநியோகத் திட்ட கள அலுவலர்கள் ஆகியோருக்கு தக்க அறிவுரைகளை இணைப்பதிவாளர் மா. சந்நதானம் வழங்கினார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

வள்ளுவரைக் களங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


